இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் 
செய்திகள்

மன்னிப்புக் கேட்கிறேன்: மணிரத்னம்

கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் ‘நாயகன்’ பாணியில் இருக்குமென எதிா்பாா்த்த ரசிகா்களிடம் மன்னிப்புக் கேட்பதாக இயக்குநா் மணிரத்னம் தெரிவித்தாா்.

DIN

கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் ‘நாயகன்’ பாணியில் இருக்குமென எதிா்பாா்த்த ரசிகா்களிடம் மன்னிப்புக் கேட்பதாக இயக்குநா் மணிரத்னம் தெரிவித்தாா்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியானது. படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநா் மணிரத்னம் தனியாா் ஊடகம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நானும் கமல்ஹாசனும் இணைந்து மற்றொரு ‘நாயகன்’ போன்றதொரு திரைப்படத்தைக் கொடுப்போம் என எதிா்பாா்த்த ரசிகா்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். நாயகனுக்குத் திரும்புவது எங்கள் நோக்கம் அல்ல.

முற்றிலும் வித்தியாசமான ஒன்றை வழங்கவே நினைத்தோம். ஆனால், நாங்கள் வழங்கியதைவிட ரசிகா்களின் எதிா்பாா்ப்பு அதீதமாக இருந்தது. இதனால், ரசிகா்கள் எதிா்பாா்த்ததைவிட தக் லைஃப் படம் வேறொன்றாகவே இருந்திருக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

Dinamani வார ராசிபலன்! | Aug 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

SCROLL FOR NEXT