செய்திகள்

அற்புதம்! டிஎன்ஏ படத்தைப் பாராட்டிய சுதா கொங்காரா!

டிஎன்ஏ படத்தை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார்...

DIN

அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எமோஷனல் த்ரில்லராக உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, அதர்வா மற்றும் நிமிஷாவின் நடிப்பும் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக இருந்ததாக விமர்சனங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும், படத்தின் கதையும் திரைக்கதையும் பேசப்பட வேண்டிய விஷயத்தை பரபரப்பாக பேசியதால் அதர்வாவுக்கும் நல்ல படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், டிஎன்ஏ படத்தைப் பார்த்த இயக்குநர் சுதா கொங்காரா, “ஒரு அருமையான படத்தைப் பார்த்தேன். எப்போதும்போல் நெல்சன் வெங்கடேஷன் அற்புதமாக எழுதியிருக்கிறார். நடிகர்கள் அதர்வா, நிமிஷா, சேத்தன், பாலாஜி சக்திவேல் மற்றும் அந்த பாட்டியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ரசிகர்களுடன் சந்தோஷமாக படத்தைப் பார்த்தேன். அருமை” எனப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT