முகப்பு
செய்திகள்

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு அப்டேட்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு குறித்து...

Updated On : 25 ஜூன், 2025 at 4:45 PM
நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், யோகி பாபு
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஜெயிலர் - 2 அடுத்தாண்டு திரைக்கு வரும் என்பதால் படப்பிடிப்பில் முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தற்போது கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ரஜினியை எதிரிகள் தேடிவருவதுபோலவும் அவர் தாக்குதல் நடத்துவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இப்பாகத்திலும் நடிகர் மோகன்லால் சிறிய தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைவெளி விட்டே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதால் டிசம்பரில் படப்பிடிப்பு முடிந்து மார்ச் வெளியீட்டாக படம் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.