அனுஷா  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ஆனந்த ராகம் தொடரில் இரட்டை வேடத்தில் களமிறங்கும் அனுஷா!

ஆனந்த ராகம் தொடரில் இரட்டை வேடத்தில் நடிகை அனுஷா நடிக்கவுள்ளார்

DIN

ஆனந்த ராகம் தொடரில் இரட்டை வேடத்தில் நடிகை அனுஷா நடிக்கவுள்ளார்.

இதுவரை ஒற்றை பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், கிராமத்துப் பெண்ணாக மற்றொரு வேடத்தில் அனுஷா நடிக்கவுள்ளார்.

ஆனந்த ராகம் தொடரில் அடிதடி சண்டைக் காட்சிகளில் அனுஷா நடிப்பது வழக்கம். பிரச்னைகளில் சிக்கிக்கொண்ட தனது குடும்பத்தினரை அதிரடியாக மீட்கும், வலிமை மிகுந்த வெளிப்படையான பெண்ணாக அனுஷா நடித்து வருகிறார். இதனால், அதிரடி நாயகி என்ற பெயரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உண்டு.

இதனிடையே எதற்கெடுத்தாலும் அச்சம் கொள்ளும் வெள்ளந்தி பெண்ணாக மற்றொரு புதிய பாத்திரத்தில் அனுஷா நடிக்கவுள்ளார். இது தொடர்பான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது.

ஆனந்த ராகம் தொடரில் புதிய திருப்பம்

இதில், கோயிலில் ரகளை செய்த ரெளடிகளை அடித்து நொறுக்கும் அனுஷா ஒருபுறமும், அந்த சண்டைக் காட்சியைப் பார்த்து மயங்கி விழும் பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக மறுபுறமும் நடித்துள்ளார். இந்த முன்னோட்டக் காட்சி நகைச்சுவை பாணியிலும் அமைந்துள்ளதால், ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. இதனால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இரட்டை வேடத்தில் அனுஷா

இத்தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி துணைப் பாத்திரங்களும் தொடரின் வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளன.

பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார், வைஷாலி தணிகா, அஞ்சலி, வரதராஜன், ஜெயக்குமார், சிவரஞ்சினி விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடர், முன்பு டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகி வந்தது. தற்போது பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் படிக்க | ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT