ஹாலிவுட் பட புரமோஷன் விழாவில் வரலட்சுமி சரத்குமார்.  படம்: ஐஏஎன்எஸ்
செய்திகள்

கனவு நனவானது..! ஹாலிவுட்டில் அறிமுகமாகும் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் ஹாலிவுட் திரைப்படம் குறித்து...

DIN

நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி (2012) படத்தில் சிம்புவுடன் வரலட்சுமி சரத்குமார் தனது முதல் படத்தில் நடித்தார்.

அதற்கடுத்து விக்ரம் வேதா, சண்டைக் கோழி 2, சர்கார், ராயன் ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றுள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிஸியாக நடித்துவரும் வரலட்சுமி தனியாக நாயகியாக நடித்த தி வெர்டிக்ட் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடந்தாண்டு ஜூலையில் நிகோலய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், “ரிஜானா - ஏ கேஜ்ட் பேர்ட்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளதை அறிவித்துள்ளார். சந்திரன் ருத்னம் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் இலங்கையில் படமாக்கப்பட்டது.

2005-இல் சௌதி அரேபியாவில் குழந்தையைக் கொன்றதற்காக தலை வெட்டப்பட்ட ரிஜானா நபீக் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து வரலட்சுமி பேசியதாவது:

அகாடமி விருது வென்ற ஜெரோமி ஐரோன்ஸ் உடன் நடித்தது நம்பமுடியாத உணர்வு. தி லயன் கிங் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். அதில்வரும் அனைத்து வசனங்களும் நியாபகத்தில் இருக்கிறது.

ஹாலிவுட்டில் அவருடன் அறிமுகமாவது கனவு நனவாகியது போலிருக்கிறது. ஜெரோமி ஐரோன்ஸ் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் மதிக்கக்கூடிய நடிகர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT