ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரில் கதையின்படி சிறப்புக் காட்சியாக எடுக்கப்பட்டுள்ள பாகம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.
Advertisement
Advertisement
இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.
இதனிடையே இத்தொடரில் அடுத்தடுத்து உள்ள சகோதரர்களுக்கு திருமணக் காட்சிகள் இடம்பெறவுள்ளன. இதன் சிறப்புக் காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சி என்பதாலும், திருப்புமுனை அமைய வாய்ப்புள்ள காட்சி என்பதாலும் தனியாகத் தெரியவேண்டும் என்பதற்காக அந்தக் காட்சியுடைய எபிஸோட் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.