நடிகர் பொன்னம்பலம்  கோப்புப்படம்
செய்திகள்

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! ஆடியோ வெளியிட்டு உருக்கம்!

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவி செய்த சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் கமல், ரஜினி, விஜயகாந்த், சரத் குமார் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக படத்தில் நடிக்காமல் இருந்த நிலையில், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார்.

சமீபத்தில் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொன்னம்பலம் நலமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொன்னம்பலம் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது:

”கடந்த பிப். 13 முதல் உடல்நலக் குறைவு காரணமாக 40 நாள்களில் 2 முறை அனுமதிக்கப்பட்டேன். தற்போது மீண்டும் சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளேன்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தற்போதுதான் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். ஆசனவாய்ப் பகுதி அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் அடிபட்டு தரைமட்டத்துக்கு வந்துவிட்டேன். நடிகர்கள் கமல், சரத்குமார், தனுஷ், கே.எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு உள்ளிட்டோர் பெரும் உதவிகளைச் செய்தனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

SCROLL FOR NEXT