X | Rashmika Mandanna
செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க வேண்டுமா? புதிய படத்தின் தலைப்பில் ட்விஸ்ட்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய படத்தின் பெயரைக் கூறுபவரைச் சந்திப்பதாக ட்விஸ்ட் வைத்துள்ளார்.

DIN

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா, தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் குபேரா வெளியாகி, இதுவரையில் ரூ. 100 கோடி வசூல் பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காட்டுப் பகுதியில் கையில் ஈட்டியுடன் சண்டையிடப் போவது போன்று ராஷ்மிகா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கதைக்களமானது, கதாநாயகியை மையமாக வைத்து உருவாவதாகத் தெரிகிறது.

புதிய தயாரிப்பு நிறுவனமான ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை நாளை வெளியாவதாக ராஷ்மிகா அறிவித்துள்ளார். இதுவரை பார்த்திராத ராஷ்மிகாவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள் என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, படத்தின் பெயரை கூறும் ரசிகரை நேரில் சந்திப்பேன் என்றும் ராஷ்மிகா ட்விஸ்ட் வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகப் பூ... ஷ்ரேயா கோஷல்!

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஒளி... அவ்னீத் கௌர்!

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு ஒட்ட ஏற்பாடு

SCROLL FOR NEXT