மார்கன் படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / விஜய் ஆண்டனி.
செய்திகள்

1,000-க்கும் அதிகமான திரைகளில் மார்கன்!

நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கன் வெளியீடு குறித்து...

DIN

நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது 12-ஆவது படமான ‘மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார்.

அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று (ஜூன் 27) வெளியான நிலையில், நேற்று படத்தின் முதல் 6 நிமிடங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், வித்தியாசமான கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருப்பதாக சமூக வலைதள விமர்சனங்கள் மூலம் தெரிய வருகிறது.

உலகம் முழுவதும் இந்தப்படம் 1,000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

மார்கன் படத்தின் போஸ்டர்.

summary

Vijay Antony has said that the maargan film has been released in more than 1,000 screens worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT