செய்திகள்

10 இயக்குநர்களுடன் 10 படங்கள்! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு!

வரும் 2 ஆண்டுகளுக்கு 10 இயக்குநர்களுடன் பணிபுரியவிருப்பதாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு

DIN

வரும் 2 ஆண்டுகளுக்கு 10 இயக்குநர்களுடன் பணிபுரியவிருப்பதாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமின்றி புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். அந்த வகையில், தற்போது 2025 முதல் 2027 வரையில் 10 இயக்குநர்களுக்கு பட வாய்ப்புகள் தரப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் 10 வகையான படங்களும் வெளியாகவுள்ளன. வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் மேனன், சுந்தர் சி, பிரேம் குமார், அருண்ராஜா காமராஜ் உள்பட 2018 பட இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப், விக்னேஷ் ராஜா (போர்த் தொழில்), செல்ல அய்யாவு (கட்டா குஸ்தி), கணேஷ் கே பாபு (கராத்தே பாபு) ஆகியோரை வைத்து, வெவ்வேறு ஃப்ளேவர்களில் படம் இயக்கப்படவுள்ளன.

மேலும், இந்த 2 ஆண்டுகளில் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் தனுஷ், ரவி மோகன், ஆர்யா, நயன்தாரா ஆகியோருடன் பணிபுரியவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் பணிகள்: மாநிலத் தலைவர்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

ஓடிடியில் தண்டகாரண்யம்!

பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்! தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!

SCROLL FOR NEXT