அட்டகத்தி பட போஸ்டர், வெற்றிமாறன். கோப்புப் படங்கள்.
செய்திகள்

அட்டகத்தி படத்தினை விற்க உதவிய வெற்றி மாறனின் சிரிப்பு!

இயக்குநர் வெற்றி மாறன் அட்டகத்தி படத்தினை விற்க உதவியது குறித்து...

DIN

இயக்குநர் வெற்றி மாறன் அட்டகத்தி படத்தினை விற்க அவரது சிரிப்பு உதவியதாக இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகியது. இந்தப் படம் உருவான சமயத்தில் அதனை யாருமே வாங்க முன்வரவில்லை என்ற சூழல் நிலவியது.

இந்தப் படத்தை வாங்க வெற்றிமாறன் எப்படி உதவினார் என இயக்குநர் ராம் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

அட்டக்கத்தி படத்தை விநியோகஸ்தர்களை அழைத்து சிறப்புக் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி மாறனையும் அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அந்தப் படம் முழுக்க வெற்றி மாறன் சிரித்துக்கொண்டே இருந்ததால் படத்தை வாங்கிவிட்டார்கள். அன்று அட்டகத்தி படம் விற்கக் காரணம் வெற்றி மாறனின் சிரிப்புதான் என பா. இரஞ்சித்தே கூறியிருக்கிறார் என்றார்.

இதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், “அட்டகத்தி படம் மிகவும் நன்றாக இருந்தது. நான் மிகவும் ஒன்றிவிட்டேன். சென்னையில் வளர்ந்தவன் என்பதால் என்னால் எனக்கு பிடித்தது.

சென்னை வாழ்க்கையை யாரும் இப்படி காட்டியதில்லை. அடுத்தநாள் ஞானவேல் ராஜா வந்து என்னிடம் ‘படம் பிடித்தது வாங்கிவிட்டேன். ஆனால், நான் உங்களது சிரிப்பினால் மயங்கி படத்தை வாங்கிவிட்டேனா அல்லது எனக்கு பிடித்துதான் வாங்கினேனா எனத் தெரியவில்லை’ எனக் கூறியதாக வெற்றிமாறன் கூறினார்.

இயக்குநர் ராம் இயக்கியுள்ள பறந்துபோ படம் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது.

Director Ram has said that Vetri Maran's laughter helped sell the film Attakathi to the distributers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!

பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தவெக மாநாட்டில் ஒலித்த பாடல்கள்!

SCROLL FOR NEXT