முகப்பு
செய்திகள்

அரசனில் இணைந்த கென்!

அரசன் படத்தில் கென்...

Updated On : 6 ஏப்ரல் 2026, 11:28 am IST
கென் - youth
பகிர்:

நடிகர் கென் அரசன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கருணாஸின் மகன் கென் நடிகர், இயக்குநர் என யூத் திரைப்படம் மூலம் அசத்தலான வரவேற்பைப் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்றாலும் அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து, விடுதலை திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையே, தனுஷ் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

Advertisement

Advertisement

தற்போது, யூத் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். நல்ல நடிப்பு திறனும் இருப்பதால், சில தயாரிப்பாளர்கள் கென்னை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் கென் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசனில் சிலம்பரசன் நாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் அமீர், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

summary

reports suggests actor ken joined arasan movie set

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.