சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?
சிவகார்த்திகேயன் படத்தில் திலீப் நடிக்கவுள்ளதாகத் தகவல்...
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் திலீப் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் டீசர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தைத் தொடர்ந்து, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். இது, சிலம்பரசனுக்காக உருவாக்கப்பட்ட கதை. ஆனால், அப்படம் ஆரம்பித்த உடனே கைவிடப்பட்டது.
இந்த நிலையில், எஸ்கே - ராம்குமார் இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reports indicate that Dileep has joined actor Sivakarthikeyan's film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.