ஆஸ்கர் குழுவில் இணைந்த கமல் ஹாசன் அதற்காக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கலைஞராக இருந்தாலும் உலகளவில் அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக அமையவில்லை. மொழி ரீதியான சிக்கல்கள், வியாபார காரணங்கள் உள்ளிட்டவையால் இந்த கவனம் கிடைக்காமல் போனது.
இருப்பினும், உலகளவில் திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்கும் இந்திய திரைத்துறையினர் கமல் ஹாசன் குறித்து பெருமிதமாக பேசுவது ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்து வந்தது.
இந்த நிலையில், ஆஸ்கர் அகாதெமி குழு இந்தமுறை ஆஸ்கர் விருது தேர்வில் வாக்களிக்க நடிகர் கமல் ஹாசன் உள்பட ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, பாயல் கபாடியா, அமெரிக்க நடிகை அரியானா கிராண்டி என 534 பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
இதற்காக, நடிகர் கமல் ஹாசனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இதுகுறித்து கமல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆஸ்கர் அகாதெமியில் இணைவதைப் கௌரவமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது அல்ல, இந்திய சினிமா துறைக்கும் என்னைச் செதுக்கிய கணக்கில்லா கதை சொல்லிகளுக்குமானது. இந்திய சினிமா உலகிற்கு நிறைய தரவுள்ளது. என்னுடன் தேர்வான பிற கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
actor kamal haasan about oscar academy for his selection
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.