தி பாரடைஸ் படப்பிடிப்பில் இணைந்த நானி!
பாரடைஸ் படப்பிடிப்பில் நானி...
தி பாரடைஸ் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் நானி இணைந்துள்ளார்.
நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்தன. இதனால், நானி நடிக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.
Advertisement
அடுத்ததாக, நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
படத்தின் கிளிம்ஸ் விடியோவும் அதில் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசையும் இந்தியளவில் கவனிக்கப்பட்ட நிலையில், தி பாரடைஸ் படப்பிடிப்பில் நானி இணைந்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த 40 நாள்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக கரடு முரடான பின்னணியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: சீஷெல்ஸில் ஒரு காதல்... வைரலான சூர்யா - ஜோதிகா விடியோ!
actor nani joins the paradise