நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
நடிகர் சிம்புவும் ரௌடி தோற்றத்திற்கு மாறியுள்ளாராம். இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் சென்னை எண்ணூரில் துவங்கியது.
இது இப்படத்தின் அறிவிப்பு விடியோவுக்கான படப்பிடிப்பு என வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடியோ ஜூலை மாத இறுதிக்குள் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை அடுத்தாண்டு திரைக்குக் கொண்டுவர வெற்றி மாறன் முடிவு செய்துள்ளாராம்.
silambarasan and vetri maaran movie announcement video update
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.