எதிர்நீச்சல் 2 தொடரில் திருச்செல்வம்  படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கும் இயக்குநர் திருச்செல்வம்!

எதிர்நீச்சல் முதல் பாகத்திலும், கோலங்கள் தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் திருச்செல்வம் நடித்திருந்தார்.

DIN

சின்ன திரை இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் இயக்கிய எதிர்நீச்சல் முதல் பாகத்திலும், கோலங்கள் தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் திருச்செல்வம் நடித்திருந்தார்.

இந்த இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் -2 தொடரிலும் ஜீவானந்தம் என்ற பாத்திரத்தில் திருச்செல்வம் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே நடிக்கின்றனர். நாயகியாக பார்வதி நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக சபரி நடிக்கிறார். இவர்களுடன் கனிகா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருவதால், அதே பாத்திரங்களின் நீட்சியாகவே கதை தொடர்ந்து வருகிறது.

இதில் வேல ராமமூர்த்தியின் (ஆதி குணசேகரன்) மகனாக நடித்துவரும் தர்ஷனை அறிவு என்பவர் கடத்திவிடுகிறார். அவரைக் காப்பாற்றும் வகையில் ஜீவானந்தம் என்ற பாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் அறிமுகமாகிறார்.

திரைப்படங்களில் வருவதைப் போன்று, ஆபத்தில் சிக்கியவர்களைக் காக்க தகுந்த நேரத்தில் நாயகனைப் போல ஜீவானந்தம் பாத்திரம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீவானந்தத்தின் வருகை எதிர்நீச்சல் தொடரில் பல திருப்பங்களை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க | முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ் நாட்டின் டாப் 5 தொடர்கள் என்னென்ன?

Serial director Thiruchelvam is also acting in the series Ethirneechal-2 serial in sun tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT