எதிர்நீச்சல் தொடருக்கு தமிழக அரசின் 4 விருதுகள்! குவியும் வாழ்த்து!
எதிர்நீச்சல் தொடருக்கு தமிழக அரசின் 4 விருதுகள் அறிவித்திருப்பது தொடர்பாக...
தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்ன திரை விருதுகளில் எதிர்நீச்சல் தொடர் 4 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
2014 முதல் 2022 வரையிலான சின்ன திரைக்கான விருதுகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதில் 2022 ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் 4 பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சிறந்த நெடுந்தொடருக்கான முதல் பரிசை எதிர்நீச்சல் தொடர் வென்றுள்ளது. சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது இந்தத் தொடரில் நடித்திருந்த கனிகாவுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதுக்கு நடிகை ஏ. ஸ்ரீவித்யா தேர்வாகியுள்ளார். சிறந்த வில்லன் நடிகருக்கான விருதுக்கு மறைந்த நடிகர் மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருதுகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, வரும் பிப். 13 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விருதாளர்களுக்கு வழங்கிப் பாராட்டுகிறார்.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகத்தில் இருந்த பாத்திரங்களை வைத்தே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் திருச்செல்வம். எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார்.
இவரைத் தவிர, எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் முதல் பாகத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன.
In the 2022 Tamil Nadu State Television Awards, the serial 'Ethirneechal' has won awards in four categories.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.