முகப்பு
செய்திகள்

வன்முறை மட்டும்தான்...!

லோகேஷ் கனகராஜுடனான புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன்...

Updated On : 30 ஜூன், 2025 at 6:58 AM
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன்
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இதற்கிடையே, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அண்மையில், படத்தின் பூஜை முடிந்திருக்கிறது.

இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலையும் (martial arts) கற்று வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், “வன்முறை மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

lokesh kanagaraj and arun matheswaran get a picture together.

முழு கட்டுரையைப் படிக்க →