செய்திகள்

மோகன்லாலுக்கு வில்லனாகும் வாய்ப்பை மறுத்த ஜீவா!

மோகன்லாலுடனான படம் குறித்து ஜீவா பேசியுள்ளார்...

DIN

நடிகர் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஜீவா மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இவர் நடித்த பிளாக் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்றது.

ஆனால், தற்போது பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியன் விமர்சன ரீதியாகவே எதிர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளதால் இப்படம் தோல்வியடையும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ஜீவா, “நிறைய இயக்குநர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். முக்கியமாக, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி அழைத்திருந்தார். ஆனால், பாதி மொட்டை அடிக்க வேண்டும் என சொன்னதால் வேண்டாம் என விலகினேன்” என்றார்.

மோகன்லால் - ஜீவா இணைந்து அரண் என்கிற ராணுவ பின்னணி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT