சிறந்த நடிகர் - ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்); சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு - சேன் பேக்கர் (அனோரா); சிறந்த நடிகை - மிகே மேடிசன் (அனோரா) 
செய்திகள்

2025 ஆஸ்கர் விருதுகள்... முழு பட்டியல் விவரம்!

97 - வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் வென்ற திரைப்படங்கள் குறித்து...

DIN

2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

97 வது ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் இன்று கோலகலமாக நடைபெற்றது. கடந்தாண்டு வெளியான சிறந்த படங்களுக்கு 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ) நாமினேட் செய்யப்பட்டுருந்தது. ஆங்கிலம் அல்லாத ஒரு வெளிநாட்டுத் திரைப்படம் இத்தனைப் பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இதற்கு அடுத்ததாக தி ப்ரூட்டலிஸ்ட் (THE BRUTALIST), விக்கட் (WICKED) என்கிற ஆங்கிலத் திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டன. கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்ப்ளீட் அன்னோன் (A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் தலா 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

இந்தியா சார்பில் `சிறந்த குறும்படம்' பிரிவில் பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த `அனுஜா' என்கிற குறும்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

97 - வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் வென்ற திரைப்படங்களின் முழுப் பட்டியல்:

சிறந்த நடிகர் - ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த நடிகை - மிகே மேடிசன் (அனோரா)

சிறந்த திரைப்படம்  -  அனோரா

சிறந்த இயக்குநர் - சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த திரைக்கதை - சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த படத்தொகுப்பு -  சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த ஒளிப்பதிவு - லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த துணை நடிகர் - கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)

சிறந்த துணை நடிகை - சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)

சிறந்த பாடல் - எல் மால் (எமிலியா பெரெஸ்)

சிறந்த பிண்ணனி இசை - டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட்

சிறந்த ஆவணக் குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா

சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)

சிறந்த அனிமேசன் திரைப்படம் - ஃப்ளோ

சிறந்த அனிமேசன் குறும்படம்  - இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்கட்

சிறந்த ஒலி வடிவமைப்பு - ட்யூன் 2

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ட்யூன் 2

சிறந்த திரைக்கதை (தழுவல்)  - பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)

சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - ஐயம் நாட் எ ரோபாட்

சிறந்த ஒப்பனை - தி சப்ஸ்டன்ஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு - பால் டேஸ்வெல் (விக்கட்)

இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு படத்திற்கு இயக்குநர் வென்ற அதிகபட்ச விருதுகளாகும்.

இதற்கு அடுத்ததாக, தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம் 5 விருதுகளையும் ட்யூன் 2, எமிலியா பெரேஸ், விக்கட் ஆகிய படங்கள் தலா 2 விருதுகளையும் வென்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT