விஜே பார்வதி. 
செய்திகள்

திருமணமே வேண்டாம்: எதிர்நீச்சல் நாயகியின் வைரல் விடியோ!

எதிர்நீச்சல் நாயகியின் வைரல் விடியோ தொடர்பாக...

DIN

திருமணமே வேண்டாம் என்று கூறும் எதிர்நீச்சல் நாயகி பார்வதியின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல் 2. இத்தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல்பாகத்தில் மதுமிதா நாயகியாக நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார்.

சின்ன திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, சன் தொலைக்க்காட்சியில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் நடிகை தேவையானியுடன் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் சிறப்புத் தொகுப்பில் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் சபரிக்கும், பார்வதிக்கும் இடையே சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இரண்டில் எது பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேட்பார், அதற்கு இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்பதுபோன்று நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதில், காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, பார்வதி திருமணமே வேண்டாம் என்று பதில் கூறினார். சபரி காதல் திருமணம் என்றும் கூறினார்.

ஆண் நண்பர்கள் பிடிக்குமா? பெண் நண்பர்கள் பிடிக்குமா? என்ற கேள்விக்கு சபரி ஆண் நண்பர்கள் பிடிக்கும் என்றும் பார்வதி பெண் நண்பர்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.

நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்ற கேள்விக்கு பார்வதி சிங்கிள் என்றும் சபரி இரண்டுமே இல்லை என்றும் சொல்கிறார். பூனை பிடிக்குமா? நாய் பிடிக்குமா? என்ற கேள்விக்கு இருவரும் நாய் பிடிக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT