செய்திகள்

கோல்டன் ஸ்பேரோ பாடல் விடியோ!

வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் விடியோ.

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 'கோல்டன் ஸ்பேரோ' பாடல் விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படம் கடந்த பிப். 21-ல் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் சகோதரியின் மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமானார். மேலும், இப்படத்தில் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் - 2!

இப்படத்தில் இடம்பெற்ற ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலின் லிரிக்க்கல் விடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் ரீல்ஸ் செய்து வைரலாக்கினர். இப்பாடல் யூடியூப்பில் 15 கோடி (150 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியது.

இந்த நிலையில், கோல்டன் ஸ்பேரோ' பாடல் விடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"துலாம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 - நாளை பார்வையிடுகிறார் முதல்வர்!

கண் கவர் பொருங்கோட... மேகா!

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

தொடர் மழையால் வெள்ளம்! கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கும் பிகார்! | Flood | Rain

SCROLL FOR NEXT