நடிகை வித்யா பாலன் படம்: எக்ஸ் / வித்யா பாலன்
செய்திகள்

பணம்தான் அதிகாரம்: வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் பணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

DIN

பெண்களுக்கு பணம் மிகவும் முக்கியமென நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

46 வயதாகும் நடிகை வித்யா பாலன் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெளியான ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

பல விருதுகளை வென்றுள்ள இவர் கஹானி படத்தின் மூலம் ஹிந்தியில் முக்கிய நாயகியானார்.

தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்கிற வித்யா பாலன் நாயகியை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

நாளை (மார்ச். 8) மகளிர் நாளகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடிகை வித்யா பாலன் கூறியதாவது:

பணம்தான் அதிகாரம்

நான் ஒரு வருடத்துக்கு முன்புதான் பணம் என்பது ஒரு அதிகாரம் என்பதை உணர்ந்தேன். இது சம்பாதிப்பது அல்ல. இது உங்களது பொருளாதாரத்தை பொறுப்பேற்பதாகும். நீங்கள் பணத்தை எப்படி சேமிப்பது, செல்வு செய்வது, முதலீடு செய்வது என்பது தீர்மானிக்க வேண்டும். பணத்தை நிர்வகிப்பது உங்களுக்கு பலத்தையும் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளவும் உதவும்.

முக்கியமாக பெண்களுக்கு பணத்துக்காக மற்றவர்களை சார்ந்து இருக்கும்போது அது அவர்களை விருப்பமற்ற திருமணம், விரும்பிய வேலையை செய்ய முடியாமல் திணறடிக்கும்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

பலருக்கும் தங்களது கனவுகளை அடைய முடியாமல் இருக்க பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார தன்னிறைவு ஒவ்வொருவருக்கும் முக்கியாமனது. ஆனால், அது பெண்களுக்கு கூடுதல் முக்கியமானது என்பேன்.

போதுமான அளவுக்கு பணம் தேவை

நான் திருமணம் செய்தபோது எனது அப்பா ‘இனிமேல் உனது வருவாயை உனது கணவர் பார்த்துக்கொள்வார்’ என்றார். அதற்கு நான், ‘ஏன் என்னை இதில் நம்பமாட்டீர்கள்? என்னுடைய பணத்தை வேறொருவர் ஏன் கவனிக்க வேண்டும்? இதுவரை நான் அதில் ஆர்வமில்லாமல் இருந்தேன். ஆனால், இப்போதிலிருந்து நான் இதைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்றேன்.

பணத்தை நிர்வகிப்பதுதான் முக்கியமானது. பல பெண்களுக்கு அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதெனக் கூடத் தெரியாது. நான் என்னுடைய பணத்தை நான் நிர்வகிக்க ஆரம்பித்தபோது பணம் வளர்ச்சியடைய தொடங்கியது. எனது பார்வையும் மாறியது.

பணம் மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணியல்ல. ஆனால், பொருளாதார சமநிலை உங்களுக்கு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உதவும். அதிகமான வசதி தேவையில்லை. ஆனால், போதுமான பணம் தேவையானது. போதுமானது என்பதை உணர்வதுதான் உண்மையான அதிகாரம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT