குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் 
செய்திகள்

நடிகர் அஜித் அடுத்த பட இயக்குநர் இவரா?

அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து...

DIN

நடிகர் அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் பெரிய வெற்றிபெறவில்லை. அஜித்தின் முந்தைய படங்களின் விளம்பரங்களும் பெரிதாக ஆரவாரமின்றியே வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளகுட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியான நாள் முதல் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெளியான டீசரை அஜித் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். மேலும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர் ஒருவர் மோதிரம் பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினர்.

வருகிற ஏப். 10 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்தின் அடுத்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்குவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இயக்குவதாகவும் கூறப்பட்ட நிலையில் அவர்கள் அஜித்துடன் படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

கடந்தாண்டுகளில் அஜித் ஏற்கனவே சிவா, ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கத்தில் தொடர்ச்சியாக இரு படங்கள் நடித்திருந்த நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைவார் எனத் தெரிகிறது.

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான பிறகு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அஜித் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT