சித்தார்த், அஸ்வின், நயன்தாரா கோப்புப் படங்கள்.
செய்திகள்

சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும்: நயன்தாரா படத்தைப் பாராட்டிய அஸ்வின்..!

தமிழக கிரிக்கெட்டர் அஸ்வின் டெஸ்ட் படத்தில் சித்தார்த்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

DIN

தமிழக கிரிக்கெட்டர் அஸ்வின் டெஸ்ட் படத்தில் சித்தார்த்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

டெஸ்ட் திரைப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதில் சித்தார்த்தின் புரோமோ நேற்று வெளியானது. இதை தமிழக வீரர் அஸ்வின் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இது குறித்து சிஎஸ்கே வீரர் ஆர். அஸ்வின் கூறியதாவது:

சித்தார்த்தின் டெஸ்ட் புரோமை பார்க்கும்போது கிரிக்கெட்டில் பல காலமாக இருந்தவர்போல் இருக்கிறார். அவரது தொழில்நுட்ப புரிதல், விளையாட்டு மீதான காதல் அவரது பயிற்சிகள் எல்லாம் இன்று திரையில் தெரிகிறது.

இந்தப்படம் சித்தார்த்துக்கு சிறப்பான ஒரு படமாக இருக்கும். இந்தப் படம் வெற்றியடைய படக்குழுவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வவை அறிவித்த அஸ்வின் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணியில் களமிறங்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

தம்மம்பட்டியில்...

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரால் பரபரப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT