நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஓடிடி தேதி!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப். 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தின் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
டிராகன் திரைப்படம் மார்ச் 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் அன்றே வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.