எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?
ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்விராஜ்...
நடிகர் ரஜினிகாந்த் எம்புரான் டிரைலர் பார்த்ததை ப்ரித்விராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: திட்டமிட்டபடி கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்!
எம்புரான் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்விராஜ், “எம்புரான் டிரைலரை பார்த்த பின் நீங்கள் என்னிடம் சொன்னவை என் வாழ்நாளுக்குமானது. இந்த உலகமே எனக்கானதுபோல் இருக்கிறது. ஒரிஜினல் சூப்பர்ஸ்டாரே, நான் எப்போதும் உங்களின் தீவிர ரசிகன்” எனத் தெரிவித்துள்ளார்.
எம்புரான் படமே மோகன்லால் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.