விருது விழாவில் நடிகை சமந்தா. படங்கள்: எக்ஸ் / டீம் சமந்தா ஃபேன்ஸ்.
செய்திகள்

ரசிகர்களின் பாராட்டு மழையில் சமந்தா..! என்ன காரணம்?

நடிகை சமந்தாவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

DIN

நடிகை சமந்தாவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் ஓடிடியில் வெளியானது.

சமந்தா நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

ட்ரலாலா மூவிங் ஃபிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2023இல் சமந்தா தொடங்கினார். இந்தத் தயாரிப்பில் முதல் படமாக ‘சுபம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் தனியார் விருது நிகழ்வில் ஜிஎஃப்ஏ ஃபேஷன் டிரைல்பிளேசர் விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில், (பபார்ஸி) தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் ஒவ்வொருவருடன் புகைப்படம் எடுத்த விடியோ வைரலாகி வருகிறது.

இந்தக் குணம்தான் சமந்தாவை உயர்த்தியுள்ளது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமிதம் கொள்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT