எம்புரான்: முன்பதிவுக்காக முண்டியடித்துச் சென்ற ரசிகர்கள்!
மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் முன்பதிவு தொடங்கியது.
மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் டிக்கெட்டினை முன்பதிவு செய்ய ரசிகர்கள் கூட்டம் முண்டியத்து சென்ற விடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் முன்பதிவு தொடங்கிய நிலையில் திரிசூரில் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்ற விடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே, புஷ்பா பட வெளியீட்டின்போது நடிகரைப் பார்க்க சென்ற கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.