நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
காதல் திரைப்படமாக உருவான சச்சின், அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டதுடன் ரசிக்கவும்பட்டது.
இந்தாண்டுடன் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சச்சின் படத்தை 2025 ஏப்ரல் 18ஆம் தேதி மறுவெளியீடு செய்யவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சச்சின், 2002 இல் வெளியான நீத்தோ (Neetho) என்கிற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.