ரஜினிகாந்த்  கோப்புப்படம்.
செய்திகள்

கடலோர மக்களுக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் விடியோ

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலோர மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள்.

அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம்.

கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு. இந்த கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, 100 சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள்.

பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?

அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி.

வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு! மன்சூர் அலிகான் காலவரையறையற்ற உண்ணாவிரதம்!

கனமழைக்கு இன்றே கடைசி நாள்... சென்னையை நோக்கி திரளும் மேகக்கூட்டங்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்..!

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

SCROLL FOR NEXT