ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா 
செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்த சுந்தரி தொடர் நடிகர்!

திருமண பந்தத்தில் இணைந்த ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா.

DIN

சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை திருமணம் செய்யவுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். இவர், தற்போது ரோஜா - 2 தொடரில் நடித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடிக்கும் புதிய தொடரொன்றில் ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்கிறார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க: நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

இதனிடையே, சுந்தரி தொடர் நடிகர் ஜிஷ்ணு மேனன், ஒப்பனைக் கலைஞர் அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில், ஜிஷ்ணு மேனன் - அபியாத்ராவுக்கு உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவர்களது திருமணத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

SCROLL FOR NEXT