நரிவேட்டை பட போஸ்டர்.  
செய்திகள்

டோவினோ தாமஸின் நரிவேட்டை: ரிலீஸ் அப்டேட்!

நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள நரிவேட்டை படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் 2012 முதல் நடித்து வருகிறார்.

என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

டோவினோ நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் சினிமா கம்பெனி தயாரிப்பில் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நரிவேட்டை எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் காவலதிகாரியாக இந்த மூவரும் நடித்துள்ளார்கள்.

உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்-புரட்கஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் மே மாதம் 16ஆம் தேதிக்குள் இந்தப் படம் வெளியாகுமெனவும் கூறியுள்ளார்கள்.

ஆனால், சரியான தேதி குறிப்பிடவில்லை. ஆனால், மே மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT