எம்புரான் படக்குழுவுக்கு மம்மூட்டி வாழ்த்து 
செய்திகள்

எல்லைகளைத் தாண்டட்டும்..! எம்புரான் படக்குழுவுக்கு மம்மூட்டி வாழ்த்து!

நடிகர் மம்மூட்டி எம்புரான் படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகர் மம்மூட்டி எம்புரான் படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

பிருத்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தின் முதல் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது.

லூசிஃபர் படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையால், எம்புரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்) தயாரிப்பாளர்களான ஆசிர்வாத் சினிமாஸ், லைகா புரடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இப்படத்தின் படப்பிடிப்புக்காக அதிக செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் நாளை ( மார்ச் 27) வெளியாகவுள்ளதால் கேரளத்தில் பல திரையரங்குகளில் டிக்கெட்கள் முன்பதிவு வாயிலாக விற்றுத்தீர்ந்துள்ளன.

இந்நிலையில் மம்மூட்டி, “எம்புரான் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப் படம் உலகத்தின் எல்லைகளைத் தாண்டி மலையாள சினிமாவை பெருமைப்பட வைக்கும் என நம்புகிறேன். என் நேசத்துக்குரிய லால், பிருத்வி அவர்களுக்காக இந்தப் படம் வெற்றிபெற நான் ஆதரவு தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் மம்மூட்டிக்காக நடிகர் மோகன்லால் அர்ச்சனை செய்த ரசீது வைரலானது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

தியாகராசா் கல்லூரி - அமெரிக்கா தமிழ் அநிதம் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரிஷப வாகனத்தில்...

சிறுமி உயிரிழப்புக்கு இழப்பீடு கோரி மனு: பள்ளிக் கல்வி செயலா் பதிலளிக்க உத்தரவு

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT