பேட் கேர்ள் போஸ்டர்.  படம்: எக்ஸ் / கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி
செய்திகள்

பேட் கேர்ள் முதல் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

DIN

நடிகர் மனோஜ் பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது.

இந்தத் துக்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜாவுக்கு இரங்கலைத் தெரிவித்து, மரியாதை நிமித்தமாக பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியாகி சர்சையான, யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.

இந்தப் படத்த்துக்கு பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT