செய்திகள்

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!

வேட்டுவம் அப்டேட் குறித்து...

DIN

வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.

இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை!

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

வெளிச்சப் பூவே... வாமிகா கேபி!

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

SCROLL FOR NEXT