சந்தீப் வங்கா, பிரபாஸ்  
செய்திகள்

பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த இயக்குநர் சந்தீப்!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து...

DIN

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட்டை மெக்சிகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் இயக்குநர் சந்தீப் வங்கா.

அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் நடிப்பதாக தகவல் சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இயக்குநர் மெக்சிகோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:

ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்வையிடவே நான் மெக்சிகோ வந்தேன். தற்போதைக்கு இதுதான் ஸ்பிரிட் படத்துக்கான அப்டேட். நாளை மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்லவிருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ், டி- சீரிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

டிட்வா புயல்: சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!இன்று எங்கெங்கு மழை?

SCROLL FOR NEXT