லைலா டாவோ இன்ஸ்டாகிராம்
செய்திகள்

சக்திவேல் தொடரில் இணையும் லைலா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சக்திவேல் தொடரில் நடிகை லைலா டாவோ இணையவுள்ளார்.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சக்திவேல் தொடரில் நடிகை லைலா டாவோ இணைந்துள்ளார். செல்வி என்ற பாத்திரத்தில் நடித்துவந்த மஹிமாவுக்கு பதிலாக லைலா நடித்துவருகிறார்.

கதைக்களத்துக்கு ஏற்ப லைலாவின் நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றம், தொடருக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், தொடரில் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு சக்திவேல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.

இந்தத் தொடரில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான மன் கீ ஆவாஸ் பிரதிக்யா என்ற தொடரைத் தழுவி, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

சக்திவேல் தொடரின் போஸ்டர்

தனது உரிமைகளுக்காகப் போராடும் பெண்ணைக் காதலிக்கும் ரெளடியைச் சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதையின் வீரியம் மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் நடிப்பும் சக்திவேல் தொடருக்கு கிடைக்கும் வரவேற்புக்கு காரணம் எனக் கூறலாம்.

அந்தவகையில் செல்வி என்ற பாத்திரத்தில் நடித்துவந்த மஹிமாவுக்கு பதிலாக லைலா டாவோ நடிக்கவுள்ளார். இவரின் வசீகரமான தோற்றத்துக்கு ஏற்ப கதாபாத்திரமும் அமைந்துள்ளதால் ரசிகர்கள் பலர் லைலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

காலம் வழங்கிய கொடை!

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

SCROLL FOR NEXT