முகப்பு
செய்திகள்

மாமன் பட டிரைலர்!

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் படத்தின் டிரைலர் வெளியானது.

Updated On : 1 மே, 2025 at 12:06 PM
மாமன் பட போஸ்டர்.
பகிர்:
Updated On : 1 மே, 2025 at 12:02 PM

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் படத்தின் டிரைலர் வெளியானது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

Advertisement

படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது.

Updated On : 1 மே, 2025 at 12:03 PM

உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

இப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சூரி அடுத்ததாக மண்டாடி எனும் படத்தில் நடித்துள்ளார். இதன் முதல்பார்வை போஸ்டரும் சமீபத்தில் வைரலானது.

சமீபத்தில் மாமன் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.