பாயல் கபாடியா 
செய்திகள்

கேன்ஸ் பட விழா நடுவராக பாயல் கபாடியா!

கேன்ஸ் திரை விழாவில் நடுவராக பாயல் கபாடியா...

DIN

இயக்குநர் பாயல் கபாடியா கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' கடந்தாண்டு நவ. 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெண்களின் காதலையும் தனிமையையும் அவர்களின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு பெண்ணுக்குத் தேவையான சுதந்திர மனநிலையை மையமாக வைத்து இந்தோ - பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக உருவான இப்படம் பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு சாதனையாக கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், விருது வெல்லவில்லை.

இந்த நிலையில், இந்திய இயக்குநர் ஒருவர் சர்வதேச அளவில் பல பரிந்துரைகளுக்குச் சென்றதால் பயால் கபாடியாவைக் கௌரவிக்கும் விதமாக 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில் அவரையும் நடுவர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த விழாவிற்கு உலகம் முழுவதுமிருந்து ஜூரிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இம்முறை, பிரெஞ்சு நடிகை ஜூலியட் பினோஜ் தலைமையில் நடிகர் ஜெர்மி ஸ்ட்ராங்க், நடிகை ஹாலே பெரி, தென்கொரிய இயக்குநர் ஹாங் சன்சூ உள்ளிட்டோருடன் பாயல் கபாடியாவும் நடுவராகிறார். இது பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ஜீவாவின் புதிய படம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Revolver Rita Movie Review | தாதா பிணத்துடன் Keerthi Suresh குடும்பம்! | Dinamani Talkies

டிட்வா புயல்: அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின்

கார் விற்பனை.. பெயர் மாற்றம் செய்யாவிட்டால் என்னவாகும்? விரிவான பார்வை!

தாய்லாந்தில் வெள்ளம்! 145 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்! தரைக்காற்றுடன் சாரல் மழை!

SCROLL FOR NEXT