நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ படத்தைப் பாராட்டியுள்ளார்.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பாராட்டியதாக கார்த்திக் சுப்புராஜ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தலைவர் ரெட்ரோ படத்தைப் பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது. அவர் என்னிடம் சொன்னதை அப்படியே சொல்கிறேன். ’படக்குழுவிடமிருந்து என்ன ஒரு உழைப்பு.. நடிகர் சூர்யாவின் நடிப்பு அருமை... படத்தின் இறுதி 40 நிமிடங்கள் சூப்பர்... சிரிப்புப் பகுதி அற்புதமாக இருந்தது.’ என்றார். நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன். லவ் யூ தலைவா” என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆர்யா சொன்னதால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சந்தானம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.