கங்கனா ரணாவத் படம்: எக்ஸ் / கங்கனா ரணாவத்
செய்திகள்

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.

DIN

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கியிருந்தார். சீக்கியர்கள் பிரச்னைகளுக்குப் பிறகு இந்தப் படம் தாமதமாக ரிலீஸானது.

4 தேசிய விருதுகளை வென்றுள்ள கங்கனா ரணாவத் தற்போது முதல்முறையாக ’பிளெஸ்ட் பி த எவில்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தினை அனுராக் ருத்ரா இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு கதா திவாரி திரைக்கதை எழுதியுள்ளார். இவர்கள் இருவருமே படத்தினையும் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படம் ஹாரர் வகையில் எடுக்கப்படுமென தயாரிப்பு நிருவனம் கூறியதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை அமெரிக்காவில் நடத்தவிருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரு கலைந்தபிறகு கைவிடப்பட்ட ஒரு பண்ணையை வாங்கிய கிறிஸ்தவ தம்பதியினரைப் பின் தொடர்ந்து நடக்கும் கதையாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT