ஃபிரீடம் படத்தின் காட்சி. 
செய்திகள்

ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது நாயகனாக பிஸியாக நடித்து வருகிறார். வெளியீட்டிற்கு பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் கருடன், நந்தன் படங்களைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி மே.1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபிரீடம் எனும் படத்தில் சசிகுமார் நடித்து முடித்துள்ளார். சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ சமீபத்தில் வெளியானது.

குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழகத்திலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலியும் இலங்கைத் தமிழர்கள் குறித்த படமாக இருந்தது.

இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜூலை10.ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழில் அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

SCROLL FOR NEXT