செய்திகள்

தீபாவளி வெளியீட்டுக்கு போட்டிபோடும் திரைப்படங்கள்!

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் குறித்து....

DIN

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர அதிக படங்கள் காத்திருக்கின்றன.

பண்டிகை நாள் வெளியீடாக நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது சாதாரணமானதுதான். ஆனால், அதிக படங்கள் வெளியாகும்போது வணிக ரீதியாக சில இழப்புகளும் ஏற்படும்.

ஒரு திரைப்படம் நன்றாக இருந்து இன்னொன்று சரியாக இல்லை என்றால் கடுமையான வசூல் பாதிப்புகள் நிகழும். இதனாலேயே பண்டிகை வெளியீட்டில் நட்சத்திர நடிகர்களின் படங்களுடன் மற்ற நடிகர்கள் படங்கள் திரைக்கு வருவதில்லை.

சூழல் இப்படியிருக்க, இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. முக்கியமாக, நடிகர் சூர்யாவின் 45-வது படம், மாரி செல்வராஜின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட் ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில படங்கள் வெளியீட்டை அறிவிக்க உள்ளதால் எந்தெந்த படங்கள் வெளியாகும் என ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டூட் புதிய போஸ்டர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT