செய்திகள்

கவனம் ஈர்க்கும் ’மனிதர்கள்’ டிரைலர்!

மனிதர்கள் டிரைலர் கவனம் பெற்று வருகிறது...

DIN

அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவான மனிதர்கள் திரைப்படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆண்டிற்கு 200 படங்களுக்கு மேல் வெளியானாலும் அதில் சுவாரஸ்யமான, கவனிக்கும்படியான படங்களும் அமைந்து விடுகின்றன.

அப்படி, அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கிய, ‘மனிதர்கள்’ திரைப்படம் ஓர் இரவில் நண்பர்களுக்குள் நடக்கும் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து மாறும் மனநிலைகளென மனித மன ஊசலாட்டங்களைக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் நடக்கும் கதையாக கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பணம்பெற்று கிரவுட் ஃபண்டிங் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதுடன் சில காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT