தர்ஷனா அசோகன் - அபிஷேக் 
செய்திகள்

கனா தொடர் நாயகிக்கு ஆண் குழந்தை!

கனா தொடர் நாயகி தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

மருத்துவரும் தொடர் நடிகையுமான தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அசோகன். இதைத் தொடர்ந்து கண்ட நாள் முதல் தொடரில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த கனா தொடர் இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதன் பிறகு இத்தொடரில் இருந்து விலகுவதாக தர்ஷனா அறிவித்தார்.

கேரளத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர், அதே துறையைச் சேர்ந்த மருத்துவர் அபிஷேக்கை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.

கடந்தாண்டு தர்ஷனா அசோகன் - அபிஷேக்கிற்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

நடிகை தர்ஷனா அசோகன் தாயாகப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”எங்கள் இதயம் விரிவடைந்துள்ளது. ஒரு சிறிய அதிசயம் நடந்துள்ளது. எங்கள் வாழ்க்கை எல்லையற்ற மகிழ்ச்சிகளால் நிரம்பியுள்ளது. அருமையான மகன் செய்யவுள்ள சாகசங்களைக் காண எங்களால் காத்திருக்க முடியவில்லை ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷனா அசோகன் - அபிஷேக்கிற்கு குழந்தை பிறந்துள்ளதையொட்டி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT