முகப்பு
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

Updated On : 15 மே, 2025 at 7:20 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 15 மே, 2025 at 7:16 PM

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கியிருந்தார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை(மே) வெளியாகிறது.

விக்னேஷ் ரவி, சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான க.மு. க.பி. திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

Advertisement

Updated On : 15 மே, 2025 at 7:18 PM

சுந்தர். சி, வடிவேலு நடித்த கேங்கர்ஸ் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

நடிகை பாவனா பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான தி டோர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

Updated On : 15 மே, 2025 at 7:18 PM

ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள மனமே திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டென் ஹவர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் அஸ்திரம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.