ரெட்ரோ போஸ்டர்.  
செய்திகள்

அன்பான ரசிகர்களுக்கு நன்றி: ரூ.235 கோடி வசூலித்த ரெட்ரோ!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் விவரம்...

DIN

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு வைர மோதிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகம் முழுவதும் ரூ.230 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ரெட்ரோ படத்தினை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு படக்குழு நன்றியைத் தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா சினிமா வாழ்க்கையில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படமாக இந்தப்படமே இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பும் சந்தோஷ் நாராயணன் இசையும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

SCROLL FOR NEXT