விஜய் சேதுபதி - விஷால் திடீர் சந்திப்பு!
விஜய் சேதுபதி - விஷால் சந்திப்பு தொடர்பாக...
சென்னை விமான நிலையத்தில் நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் விஜய் சேதுபதிக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அடுத்ததாக, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி. ஆறுமுகக் குமார் இயக்கத்தில் தனது 51-வது படமான ஏஸ் (Ace) படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததாக நடிகர் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில், “என் அன்பு நண்பர் விஜய் சேதுபதியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவரைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரைப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்.
அவருடன் சில நிமிடங்கள் உரையாடினாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய(விஜய் சேதுபதி) எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 4 மாதத்தில் திருமணம்: விஷால்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.